சாத்தூர் பைப்பாஸ்ரோடு நான்கு வழிச்சாலையில் செல்லும் சொகுசு பேருந்தில் தீவிபத்து 18பயணிகள் உயிர்தப்பினார்கள்.
களியக்காவிளையிலிருந்து-கோயம்புத்தூர் செல்லும் சொகுசு பேருந்து 18 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது சாத்தூர் பைபாஸ் நான்கு வழிச்சாலையில் சொல்லும் போது டீசல் டேங்க் வெடித்ததில் பேருந்து முழுவதும் தீ பற்றியது.
இதை அடுத்து பேருந்தில் இருந்து அனைத்து பயணிகளும் அலறி எடுத்து வெளியே ஓடினார்கள்.இதையடுத்து தகவலறிந்து வந்த சாத்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.