வைகோ புயலின் 19 மாத சிறைவாசமும், 12ஆண்டு பொடா வழக்கும், – ஒரு சிறப்பு தொகுப்பு..!!
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஜூன் 29ம் தேதி 2002ம் ஆண்டு மதிமுக பொதுக்குழு கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் சுப்பிரமணிய சுவாமி, விடுதலை புலிகளின் நிலைப்பாடு பற்றி திரு வைகோ அவர்களிடம் கேள்வி எழுப்பினார்..
அவரின் அனைத்து கேள்விகளுக்கும், மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது, ” விடுதலை புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன்” என்று கூறினானர்.
கூட்டம் முடிந்ததும், அமெரிக்காவில் இருக்கும் மகளை பார்ப்பதற்காக கிளம்பினார்.
அந்த நேரத்தில், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவா பேசிய காரணத்திற்காக.., வைகோ, ஈரோடு கணேஷ மூர்த்தி, மற்றும் பூமிநாதன் உட்பட 9 பேரை. க்யூ (Q) பிரிவு போலீசார், “பொடா” சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
தன் மகளை பார்ப்பதற்காக, அமெரிக்கா சென்ற வைகோ அவர்களை, ஜூலை 11ம் தேதி விமான நிலையத்தில் வைத்தே கைது செய்து, திருமங்கலம்
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
பின் வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணையை பூந்தமல்லி பொடா சிறப்பு நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது.
திரு வைகோ உட்பட 9 பேர் மீதும் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர்.
உடன் இருந்தோர் பலமுறை ஜாமீன் மனு தாக்கல் செய்ய சொல்லி, திரு வைகோ விடம் வேண்டுகோள் வைத்துள்ளனர். ஆனால் அதை அவர் மறுத்து விட்டார்.
மறைந்த தலைவர் கலைஞர் இரண்டு முறை சிறை சென்று, திரு வைகோவை சந்தித்து பேசிய பின்னரே.., ஜாமீன் மனு தாக்கல் செய்ய ஒப்புக்கொண்டார்.
அதன் பின் பிப்ரவரி 7ம் தேதி 2004ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். வேலூர் சிறையில் இருந்தே தாரை, தப்பட்டை முழங்க 8 மணி நேரம் மதிமுக வினர் ஊர்வலமாக கொண்டு வந்துள்ளனர்.
விடுதலைக்கு பின் சிறைவாசம் பற்றி அவரிடம் பேசிய போது.., “47 ஆயிரம் கிமி தூரம், பல நீதிமன்றங்களுக்கு என்னை போலீசார் அலைய விட்டனர்.
இந்த வழக்கில் முகந்திரம் இல்லை, வழக்கை வாப்பஸ் செய்துக்கொள்ள பொடா மறுசீராய்வு குழு, தமிழக அரசிற்கு அறிவுறுத்தியது.
ஆகஸ்ட் 2004ம் ஆண்டு, பூந்தமல்லி சிறப்பு நீதி மன்றத்தில் வழக்கை வாப்பஸ் பெற, தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அதை நீதி மன்றன் ஏற்றுக் கொள்ளவில்லை.
நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து, திரு வைகோ உட்பட 9பேரும் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஆனால் அதற்கு இடையில் சோகம் அளிக்கும் விதமாக, குற்றம் சாட்டப்பட்ட வீர இளவரசன் மற்றும் பி.எஸ் மணியன் ஆகியோர் இறந்து விட்டனர்.
9 ஆண்டு களுக்கு பிறகு, ஜூலை மாதம் திரு.வைகோவின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பெயரில் 7பேரும் “சென்னை உயர் நீதி மன்றத்தில்” மனு தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரணை செய்த நீதிபதி ராஜேஸ்வரன் மற்றும் மதிவாணன், பொடா வழக்கை ரத்து செய்து. திரு வைகோ உட்பட 7பேரையும், 13 ஆண்டு பிறகு விடுதலை செய்தனர்.
இதுவே திரு.வைகோ புயலின் சிறை பயணம்… ஆகும்.