2 கோடி கையெழுத்து பிரதிகள் குடியரசு தலைவரிடம் வழங்கப்பட்டது

திமுக கூட்டணி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் பெறப்பட்ட 2 கோடி கையெழுத்து பிரதிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரை சந்தித்து வழங்கினர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் பெறப்பட்ட 2 கோடி கையெழுத்து பிரதிகளை மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரங்கராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருமாவளவன் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கற்றறிந்தவர்கள் முதல் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் சிஏஏவுக்கு எதிராக பதிவு செய்த எதிர்ப்பை குடியரசுத் தலைவரிடம் எடுத்துக் கூறியதாக தெரிவித்தார்.

What do you think?

அடிச்சுட்டாய்ங்கடா எம்ஜிஆருக்கும் காவிச்சாயம்!!!

அவிநாசி அருகே கோர விபத்து – 20 பேர் பலி