2 நாளில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மறைவு : திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்கவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2 நாளில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மறைந்ததை தொடர்ந்து திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்தானது.

குடியாத்தம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர் காத்தவராயன் (59). திருமணம் செய்துகொள்ளாத இவர், தனது சகோதரர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

காத்தவராயன் எம்.எல்.ஏ., இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மத்திய மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். 2011ல் நகர்மன்றத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து இதய அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிப்ரவரி 27 ஆம் தேதியான நேற்று திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இன்று மற்றொரு திமுக எம்எஏல்வான காத்தவராயன் உடல் நலக்குறைவினால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவங்கள் திமுகவினருடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து இரண்டு எம்எல்ஏக்கள் உயிரிழந்துள்ளதால் தற்பொழுது சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 98 ஆக குறைந்துள்ளது.

இந்நிலையில், திமுக எம்எல்ஏக்கள் இரண்டு பேர் மரணம் அடைந்த நிலையில் நாளை நடைபெறவிருந்த எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், நாளை திட்டமிட்டபடி அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவது சரியாக இருக்காது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கருதியுள்ளார். எனவே, பின்னொரு நாளில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.

What do you think?

பாஜகவுக்கு கிடைத்த ரூ.742 கோடி பம்பர்!!!

கொரோனா வைரஸ் – சீனாவை ஓவர்டேக் செய்யும் ஈரான், இத்தாலி