தாராபுரம் அருகே எதிரே வந்த வேன் மீது கார் மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் பலி ஏழு பேர் படுகாயம்
திருப்பூர் காங்கேயம் அடுத்த ஓலப்பாளையம் தனியார் வங்கியில் பணியாற்றும் அஜய் பாபு குடும்பத்தினர் பழனியில் நடைபெறும் குடும்ப நிகழ்ச்சி ஒன்றுக்காக
அவரது மனைவி அபிராமி மகள் ஹாசினி தங்கை லலிதா காரில் பயணம் சென்று கொண்டிருந்தனர். காரை டிரைவர் ஆனந்தன் ஒட்டி வந்தார் இவர்கள் சென்ற கார் தாராபுரத்தை அடுத்த பழனி சாலை மனக்கடவு என்ற இடம் அறிய சென்றபோது எதிரே பழனியில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற ட்ராவலர் வேன் இடையே வந்த மற்றொரு கார் மீது மோதாமல் இருப்பதை தவிர்க்க எதிரே வந்த கார் மீது மோதிய விபத்தில் ட்ராவலர் வேனில் பயணம் செய்த திருமூர்த்தி என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த திருமூர்த்தியின் மனைவி தேவி மகள் சௌமியா மகன் சரவணன் மற்றும் உறவினர்கள் எட்டு பேருடன் பயணம் செய்தனர்.
நடைபெற்ற விபத்தில் மகன் சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சரவணன் தாயார் தேவி பரிதாபமாக பலியானார். காயமடைந்த அனைவரும் முதலுதவி சிகிச்சை பெற்று கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அலங்கியம் போலீசார் விபத்து பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.