+2 முதல் டிகிரி முடித்த பட்டதாரிகளுக்கு உதவித்தொகை..!
மராட்டியில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி 12வது வரை படித்தவர்களுக்கு மாதம் 6,000 ரூபாய் உதவிதொகையும்., பட்டதாரி இளைஞர்களுக்கு 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அதில் முதலமைச்சர் “ஏக்நாத் ஷிண்டே” தலைமையிலான சிவசேனா கட்சியும், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் இணைந்து ஆட்சி செய்கிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மராட்டியாவில் பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்த நிலையில், நடப்பாண்டின் இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற அக்கூட்டணி கட்சியினர் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
அந்த வகையில் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித் தொகையாக அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி 12ம் வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு மாதம் 6,000 ரூபாய் உதவிதொகையும் டிப்ளமோ படித்து முடித்தவர்களுக்கு மாதம் 8000 ரூபாய் உதவித்தொகையும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் உதவிதொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு இளம் வாக்காளர்களை கவரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் இந்த மாநிலத்தில் சுமார் 10 லட்சம் இளைஞர்கள் பயன் பெறுவார்கள் என்றும் இதனால் ஆண்டுக்கு 10,000 கோடிக்கு மேல் மாநில அரசுக்கு செலவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..