‘தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு’ 2 பெண்கள் தற்கொலை முயற்சி!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு 2 பெண்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மனு கொடுப்பதற்காக மெலட்டூர் மேலக் குளக்கரையைச் சேர்ந்த சம்பத் சிவப்பிரியா என்ற பெண் தனது தாய் முத்துலட்சுமி மற்றும் சகோதரியுடன் வந்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் நுழைவுவாயிலில் சென்றவுடன் சிவப்பிரியாவும், தனலெட்சுமியும் தாங்கள் கொண்டு வந்த பாட்டிலிருந்த மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். இதைப் பார்த்த போலீசார் இருவரையும் மீட்டு அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தற்கொலை முயற்சியை தடுத்தனர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், “சிவப்பிரியா மகன் பாலாஜியை அதே பகுதியில் சிலர் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தாக்கியதாகவும், அது தொடர்பாக மெலட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும் எந்தவித நடவடிக்கையம் எடுக்கப்படவில்லை என்பதால் விரக்தி அடைந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளனர். இருவரையும் போலீசார் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

What do you think?

சச்சினுடன் பாக்ஸிங் – இர்பான் பதான் மகனின் வைரல் வீடியோ

வைகோவின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் பதில்