காப்பி அடித்தால் 2 ஆண்டுகள் தேர்வெழுத தடை!

காப்பி அடித்தால் இரண்டு ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடைவிதிக்கப்படும் என அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதில் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு வருகிற 2ம்-தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வுகளில் முறைகேடு செய்தால் தேர்வர்களுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன? என்பது குறித்து அரசு தேர்வுத்துறை விளக்கம் அளித்து இருக்கிறது.

இதுதொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வு அறையில் அன்றைய தேர்வு தொடர்பான புத்தகம், நோட்ஸ், துண்டு சீட்டு வைத்திருந்து தானாக முன்வந்து ஒப்புக்கொண்டால், அந்த தேர்வரை தலைமை கண்காணிப்பாளர் எச்சரித்து அவரிடம் விளக்கம் எழுதி வாங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர் மற்றொரு தேர்வரை பார்த்து காப்பி அடித்தாலோ அல்லது தேர்வு அறையில் இருந்தோ வெளியில் இருந்தோ வேறொருவரிடம் இருந்து உதவி பெற்றாலோ அவர் அந்த தேர்வில் தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன், ஓராண்டு தேர்வு எழுத தள்ளி வைக்கப்படுவார் என்றும், தடை செய்யப்பட்ட ஆவணங்களை கொண்டு காப்பி அடித்தால், அந்த பகுதிக்கான மதிப்பெண் ரத்து செய்யப்படுவதோடு, தேர்வர் அடுத்த 2 ஆண்டுகள் தேர்வுகளை எழுதவும் தடை செய்யப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த தேர்வர் தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன், வாழ்நாள் தேர்வு எழுதவும் தடைவிதிக்கப்படும் என்றும், வினாத்தாளை முன்கூட்டியே வெளியிட்டது கண்டறியப்பட்டால், தேர்வுக்கான தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு, 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுதவும் தடைவிதிக்கப்படும்.என்று எச்சரித்துள்ளது.

விடைத்தாளில் வரிசை எண்ணை மாற்றி குறிப்பிட்டு கொடுத்தாலோ, மற்ற தேர்வரின் விடைத்தாள்களை மாற்றிக்கொள்வது கண்டறியப்பட்டாலோ அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவதுடன், 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாமல் தள்ளிவைக்கப்படுவார். என்றும், வினாத்தாளில் விடை எழுதி மற்றொரு தேர்வருக்கு தூக்கி எறிவது கண்டறிந்தால், அந்த தேர்வர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். என்றும் அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

What do you think?

நடிகர் ரஜினியுடன் ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் சந்திப்பு

பொருளாதாரம் சரிவில் இருந்து மீள வாய்பில்லை – மத்திய அரசு