சீரமைக்கப்பட்ட 20 சுரங்கப்பாதைகள்..!! அந்த ஒரு ரூட்ல மட்டும் போகாதிங்க மக்களே..!!
சென்னையில் 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் நேற்று தேங்கிய நிலையில் அவற்றில் 20 சுரங்கப்பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் கணேசபுரம் பகுதி சுரங்கபாதை மட்டும் மூடப்பட்டுள்ளது…
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்துள்ள நிலையில்., தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது இதனால் சென்னையின் 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது…
அதனை தொடர்ந்து சென்னையில் மழைநீர் தேங்காத வண்ணம் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், மண்டலம் வாரியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் மழைநீர் சூழ்ந்த 21 சுரங்கப்பாதைகளில் 20 சுரங்கபாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளது… அதுகுறித்த தகவல்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சீரமைக்கப்பட்ட சுரங்கபாதைகள் :
கத்திவாக்கம், மாணிக்கம் நகர், வியாசர்பாடி, எம்.சி. ரோடு (ஸ்டான்லி மருத்துவமனை), ரிசர்வ் வங்கி, கெங்குரெட்டி, வில்லிவாக்கம், ஹாரிங்டன், நுங்கம்பாக்கம்., ஜோன்ஸ் ரோடு., துரைசாமி சுரங்கப்பாதை., மேட்லி, ரங்கராஜபுரம்., பஜார் ரோடு., மவுண்ட்., தில்லை கங்கா நகர், பழவந்தாங்கல்., அரங்கநாதன்., ஸ்டான்லி நகர்., மற்றும் பெரம்பூர்.. என 20 சுரங்கபாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளது.. எனவே இந்த பகுதிகளில் வாகன ஓட்டிகள் செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளது..
அதேசமயம், கணேஷ்புரம் சுரங்கப்பாதையில் மழைநீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. எனவே இந்த பகுதியில் மட்டும் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..