21 நாள் ஊரடங்கு எனும் பிரதமர் அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு…!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பைத் தடுக்க 144 தடை உத்தரவை இன்று மாலை முதல் தமிழக அரசு அமல்படுத்தியது.

பின்னர் இரவு 8 மணிக்கு பேசிய பிரதமர் தயவுசெய்து 21 நாட்கள் ஊரடங்கை நாமெல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கரோனா வைரஸை ஒன்றுபட்டு முறியடிப்போம் என்று தெரிவித்தார்.

பிரதமரின் இந்த கருத்தை ப.சிதம்பரம், ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமரின் அறிவிப்பை வரவேற்று முகநூலில் பதிவிட்டுள்ளார்.

“கொரோனா வைரஸின் கொடூரம் தடுக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 21 நாள் கடைப்பிடிக்கச் சொன்ன ஊரடங்கு உத்தரவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். நமக்கு நாமே இதனைச் சட்டமாக்கிக் கொள்வோம்.

நோய் பரவாமல் தடுக்க இதைத் தவிர மாற்றுவழி இல்லை என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து இதனைக் கடைப்பிடிக்க வேண்டும். தன்னையும் காத்து நாட்டையும் காப்போம்”.என்று தெரிவித்துள்ளார்.

What do you think?

கொரோனா நிவாரண நிதியாக ஒரு மாத சம்பளம்! – வைகோ அறிவிப்பு

வெளியில் செல்லும் போது முறையான ஐடிக்கள், டாக்குமெண்டுக்களை வைத்துக்கொள்ள வேண்டும் : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்