23 லட்சம் ரூபாய் பண மோசடி..!! பாஜக பிரமுகர் கைது..!! பின்னனியில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்..!!
வேளச்சேரியில் ஆசை வார்த்தை கூறி தொழிலதிபரிடம் 23 லட்சம் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் பாஜக மண்டல் இளைஞர் அணி தலைவர் கைது செய்து சிறையில் அடைப்பு.
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் பிரவின் சுந்தர் (வயது 27), இவர் பாஜகவில் முன்னாள் மண்டல் இளைஞரணி தலைவராக இருந்துள்ளார். தற்போது பாஜகவில் உறுப்பினராக உள்ளார். பிரவின் சுந்தர் மற்றும் அவரது காதலி ஆர்த்தி இருவரும் சேர்ந்து செல்போன் கடை நடத்தி வரும் பிரவின் சுந்தர் லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற சர்வீஸ் செய்யும் பணியும் செய்து வந்துள்ளார்.
அப்பொழுது சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ஐடி நிறுவனம் வைத்து நடத்தும் சங்கரரமான் (48) என்பவர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சங்கரராமன் அவரது நிறுவனத்தில் பழுதான கம்ப்யூட்டர் சரிபார்க்க கொடுத்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு கடையில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று கூறி சிறுக சிறுக பிரவின் சுந்தர் சங்கரராமணிடம் பணம் கடனாகப் பெற்றுள்ளார். பின்னர் கடனை திருப்பி தர முடியாத சூழலில் சங்கரராமனை கடையில் பார்ட்னராக சேர்த்துக் கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பணத்தை வாங்கியுள்ளார். இப்படி சிறுக சிறுக சுமார் 23 லட்சம் பணத்தை பிரவின் சுந்தர் சங்கராமணிடம் பெற்றுள்ளார்.
கடையில் வரும் லாபத்தையும் கணக்கு காட்டாமல், வாங்கிய கடனையும் திருப்பி தராமல் ஏமாற்றியதை உணர்ந்த சங்கரராமன் பலமுறை பிரவின் சுந்தர் ரிடம் கேட்டும் பணம் கிடைக்கவில்லை, சரியான பதிலும் வரவில்லை என்பதால் தொழிலதிபர் சங்கரராமன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தன் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த பிரவின் சுந்தர் தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த முன்னாள் பாஜக பாஜக மண்டல் இளைஞர் அணி தலைவர் பிரவின் சுந்தரை கைது செய்து வேளச்சேரி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கைதான பாஜக பிரமுகரின் காதலியை தேடி வருகின்றனர்.