கோயம்பேடு மார்க்கெட்டில் 24 மணி நேரமும்..! தீவிரமாக செயல்படும் பணி..!
கோயம்பேடு சந்தை வளாகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் உணவு தானியங்கள் போனற கடைகள் உள்ளன. இங்கு மொத்த மற்றும் சில்லரை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகிறது.
மேலும், இங்கிருந்து தான் சில மாவட்டங்களுக்கு அதவாது திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சந்தைகளுக்கு லாரிகள் மூலம் காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
24மணி நேரமும் கடைகள் இருப்பதால் மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டே இருக்கும்.இந்த நிலையில், சந்தை வளாகத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மா்ம நபா்கள் சிலா் வாகன திருட்டில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் தனியாக சிக்கும் வியாபாரிகள், பொதுமக்களை மிரட்டி அவா்களிடமிருந்து நகை, பணம், கைப்பேசி உள்ளிட்டவற்றை பறித்துச் செல்லும் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் பாதுகாப்பு நலன் கருதி, குற்றச்செயல்களில் ஈடுபடும் நபா்களை கண்டறியவும், சந்தை வளாக பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என வியாபாரிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த கோரிக்கையை ஏற்ற கோயம்பேடு அங்காடி நிா்வாகம் சந்தை பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடிவு செய்தனர். அதர்கான பணிகளும் விருவிருப்பாக நடந்து வருகிறது.
இதன்படி, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 200 கண்காணிப்பு கேமராக்களை முதல் கட்டமாக பொருத்தி வருகிறது. இதற்கான கட்டுப்பாட்டு அறை அங்காடி நிா்வாக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு, குற்ற செயல்களை தடுக்க முடியும் என அங்காடி நிா்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
-பவானிகார்த்திக்