KFC சிக்கன் இனி ஆரோக்கியமா வீட்டிலே செய்யலாமா…!
சிக்கன் – 500 கிராம் (பெரிய துண்டுகளாக நறுக்கியது)
மைதா – 1 கப்
சோள மாவு – 1/2 கப்
எண்ணெய் – பொரிக்க போதுமானது
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்
பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
இஞ்சி விழுது – 1 டீஸ்பூன்
உலர் தைம் இலைகள் – 2 டீஸ்பூன்
காய்ந்த ஆர்கனோ – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் 1 டீஸ்பூன்
உப்பு – 2 டீஸ்பூன்
சிக்கன் மசாலா பவுடர் – 3 டீஸ்பூன்
வெள்ளை மிளகு தூள் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
உப்பு – 2 டீஸ்பூன்
எலுமிச்சை – 1
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சர்க்கரை, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஃபிரிஜ்ஜில் வைத்து 2 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, மேலே குறிப்பிட்டுள்ள மசாலா தூள், பச்சை மிளகாய் மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நன்றாக குளிர்ந்த நீரை எடுத்துக் கொண்டு சிக்கனை அதில் போட்டு 7 வினாடிகளுக்கு வைத்திருந்து பின் எடுத்து அந்த மாவில் போட்டு அனைத்திலும் நன்றாக மாவை தடவி தனியே எடுத்து வைக்கவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சிக்கனை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அவ்ளோதான் இப்போ சுவையான KFC சுவையில் சிக்கன் தயார்.