லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி…!

மார்ச் 1-ந்தேதி முதல் அனைத்து லாட்டரிகளுக்கும் 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரளா, மகாராஷ்டிரா, மேற்குவங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்து வருகிறது. தற்போது அரசு லாட்டரிகளுக்கு 12 சதவீதமும், அரசு அங்கீகாரத்துடன் நடத்தப்படும் லாட்டரிகளுக்கு 28 சதவீதமும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. 

லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி…!

இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் லாட்டரிகளுக்கு ஒரே விதமாக 28 சதவீதம் வரி விதிக்க கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் லாட்டரிக்கு ஒரே விதமாக 12 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என்று அந்த துறையினர் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. மார்ச் 1-ந்தேதி முதல் அனைத்து லாட்டரிகளுக்கும் 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரும் என மத்திய வருவாய் துறை அறிவித்துள்ளது.

What do you think?

தங்கம் விலை உயர்வு …!

டிரம்ப் வருகை : பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி 4 கேள்விகள்…!