இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ்!

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது.இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் கூறுகையில், “இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்ட்டிருப்பதாகவும், இத்தாலியை சேர்ந்த 16 சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும்” கூறினார்.

மேலும் ஆக்ராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும், கேரளாவை சேர்ந்த 3 பேர் மற்றும் டெல்லியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

What do you think?

இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ள இத்தாலியர்கள் 15 பேருக்கு கொரோனா வைரஸ்!

‘T20 போட்டியில் வெறும் 37 பந்துகளில் சதம்’ ருத்ரதாண்டவம் ஆடிய ஹர்திக் பாண்டியா!