இத்தாலியில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரே இரவில் 283 அதிகரிப்பு !

இத்தாலியில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரே இரவில் 283 ஆக அதிகரித்துள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் முதுமையாலோ அல்லது வேறு வியாதிகளாலோ உயிரிழந்திருப்பார்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் 2 பிராந்தியங்களில் பள்ளிகள், அருங்காட்சியகங்கள், திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளன.

இத்தாலியின் லோம்பர்டி பிராந்தியத்தில் 10 நகரங்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளன. சிசிலி தீவில் ஒரு பெண், குரோஷியாவில் ஒரு ஆண், ஆஸ்திரியாவில் தம்பதியர் இருவர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் லோம்பர்டியிலிருந்து வந்தவர்களென தெரிய வந்துள்ளது.

அதே போல் லோம்பர்டியின் எல்லையை ஒட்டியுள்ள ஸ்விட்சர்லாந்திலும் 70 வயது முதியவர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஸ்பெயினின் கேனேரி தீவில் மருத்துவர் ஒருவருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் தனிமைபடுத்தப்பட்டு, அதிலுள்ள 1000 பயணிகள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

What do you think?

டெல்லி வன்முறை சென்னையிலும் தொடரும் – கலவரத்தை தூண்டும் எச்.ராஜா! #BJPBURNINGINDIA

டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்- சோனியா காந்தி வலியுறுத்தல் !