2கே கிட்ஸ் அட்டூழியம்..! இந்த பாய் பெஸ்டிக்கு ஒரு முடிவே இல்லையா..?
நல்ல சரியான மழை பெஞ்சிட்டு இருக்கு.., எப்போடா பஸ் வரும் வீட்டுக்கு போகலாம் அப்படினு பார்த்துட்டு நின்று கொண்டு இருந்தேன். ஒரு வழியாக பஸ் வந்தது உக்காருவதற்கு இருக்கையும் கிடைச்சது. ஜன்னல் ஓரம் நான் அமர்ந்து மழையை ரசித்து கொண்டு இருந்தேன்.
கொஞ்சம் தூரம் போக பக்கத்து பஸ்டாண்டில் ஒரு 18 வயதில் இருந்து 20 வயதிற்குள் இருக்கும் பெண் ஏறினாள் என் பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள். அதுவரைக்கும் எந்த ஒரு தொந்தரவும் இல்லாம பயணம் செஞ்ச நான், அந்த பெண் வந்ததும் கடுப்பாகிட்டான்னு சொல்லலாம்.
ஏன்னு சொல்லுறன் நீங்களும் கேளுங்க.., காதில் போனை வைத்து கொண்டு எரிச்சல் ஊட்டும் வகையில் பேசிக்கொண்டு இருந்தால், நான் கூட சரி அவளோட காதலனிடம் தான் பேசிக்கொண்டு இருக்குது போல அப்படினு நினைத்தேன்.
அவன் இந்த பொண்ணை வெளியில் செல்லுவதற்கு அழைத்திருப்பான் போல அதற்கு இந்த பெண் நீ எனக்கு பரோட்டா வாங்கி கொடுப்பியா அதுவும் ரோட்டு கடையில் வாங்கி கொடுக்க சொல்லி பேசிகிட்டு இருந்தா.., நேரம் கடந்து சென்று கொண்டிருக்கு தீடிர் என்று உன் பொண்ட்டாடி இன்னும் வரலையா இன்னும் என் கூட கடலை போட்டு இருக்க அப்படினு சொன்னதும் என் மனதிற்குள் நானே துப்பி கொண்டேன்.
ச்சீ இப்படியும் பெண்கள் இருக்கிறார்களா..? என்று நினைத்தேன், கள்ள காதல்கள் பலவிதம் நியூஸ் பேப்பரில் பாத்திருபோம், தொலைக்காட்சியில் பாத்திருபோம் கண்முன்னாடி பார்க்கும் பொழுதான் தெரிகிறது உலகம் எதை நோக்கி செல்லுகின்றது என..
சரி உங்களுக்கு இது நீங்க பாட்டுக்கு கேட்டும் கேட்காத மாதிரி போலாம்னு நீங்க சொல்லாம்.., ஒருத்தங்க பக்கத்துல இருந்துட்டு நம்ப காது ஜவ்வு கிழியுரா மாதிரி பேசுறப்போ தான் கடுப்பாகுது. அதுக்கூட பரவாயில்லங்க கடைசியில அந்த பொண்ணு ஒன்னு சொல்லுச்சு பாருங்க அதுக்கு தான் என்ன சொல்லுறது தெரியல..,
சரிடா நான் இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சு.., என் ஆளு வெயிட் பண்ணுவான்.., நான் உன் கூட நைட் வீடியோ கால் பேசுறன் பாய் டா பெஸ்டி செல்லம் சொல்லுச்சுங்க.. அடத் தூ… னு நான் உங்கள மாதிரி தான் துப்புனன்..
இது மாதிரி ஒரு கேரக்டர் நீங்க ட்ராவல் பண்ணும் போது பார்த்து இருக்கீங்களா சொல்லுங்க..?
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..