2கே கிட்ஸ் கஞ்சா ரீல்ஸ்..! சிக்கிய கும்பல்..! எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்க பாத்தியா..!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சிறுவர் பூங்காவில் சில 2கே கிட்ஸ் இளைஞர்கள் போதையில் மிதப்பது போல வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைதளமான இன்ஸ்டாவில் ரீல்ஸாக பதிவிட்டுள்ளனர்.
அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பயன்படுத்தி அதன் மூலம் போதை ஏறி பூங்காவில் விழுந்து கிடப்பது போல வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இப்படி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவது மற்றும் பொது மக்களுக்கு இடையூறு விளைவிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது..
இந்நிலையில் இந்த 2கே கிட்ஸ் இளைஞர்கள் கஞ்சா அடித்து விட்டு.., பிறரை அவதூறாக பேசுவது, பைக் ஸ்டண்ட் செய்வது போன்ற வீடியோக்களை இன்ஸ்டா, பேஸ்புக் போன்றவற்றில் வீடியோவாக பதிவிட்டுள்ளனர். இதனை கண்ட சில சமூக ஆர்வலர்கள் காவலர்களுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து இணையத்தில் வீடியோ வெளியிட்ட நபர்களை போலீசார் தேடி வந்துள்ளனர். மேலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா ரீல்ஸ் தொடர்பாக பழனியை அடுத்த பாலசமுத்திரத்தை சேர்ந்த சிவக்குமார், மகாபிரபு, கார்த்தி, பாலசுப்ரமணியன், ராம்குமார், மதன்குமார் ஆகிய 6 நபர்களை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் கஞ்சா புகைக்க பயன்படுத்திய Bong (புகையிலை உறிஞ்சி). கைப்பற்றப்பட்டு வழக்கு பதிந்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கஞ்சா புகைக்கும் ரீல்ஸ் வீடியோ சம்பந்தமாக பாலசமுத்திரத்தை சோந்த மணிகண்டன் , மதி மற்றும் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய பாலசமுத்திரத்தை சோந்த பாஸ்கர் மற்றும் முத்துராஜா ஆகியோர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக கள்ளச் சந்தை மது விற்பனைக்கு திண்டுக்கல் முழுவதும் தடை விதிக்கப்பட்டு கட்டுப்பாடாக இருக்கும் நிலையில், கஞ்சா வியாபாரத்தை தடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
– லோகேஸ்வரி.வெ