இளைஞர்களுக்கான 3 அம்ச திட்டம்..! சம்பளமே 2 மடங்கா..!
2024-25-ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
7வது முறையாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 3வது முறையாக பிரதமரான மோடி தலைமையிலான கூட்டணி அரசின் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும். இளைஞர்களுக்காக 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கான பிரதமரின் 5 அம்சத் திட்ட அமலாக்கத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், கல்வி ஆகியவை பிரதமரின் 5 அம்சத் திட்டத்தில் அடங்கும் என கூறியுள்ளார். வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ரூ. 1.52 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அரசின் முன்னெடுப்பால் அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள்.
நிலக்கடலை, எள், சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டம் வகுக்கப்படும் என்றும் தெரிவித்தார். வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்புக்கு 3 அம்ச திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் புதிதாக நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்படும் நபர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை அரசு வழங்கும் எனவும் ஒரு மாத ஊதியம் ரூ.15,000க்கு உட்பட்டு இருக்கும் பட்சத்தில் அரசே வழங்கும் எனவும் இந்த திட்டத்தின் மூலம் 2.1 கோடி இளைஞர்கள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்றும் விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அமலாக்க மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத பயிர்களை அறிமுகப்படுத்த திட்டம் வகுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பருப்பு, எண்ணெய் வித்து உற்பத்தியில் தன்னிறைவு பெற திட்டங்கள் முன்னெடுக்கப்படும். நாடு முழுவதும் 10,000 உயிரி ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். அடக்க விலையை காட்டிலும் 20 சதவீதம் லாபத்தில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுகிறது என தெரிவித்த அவர் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க அரசு தீவிர கவனம் செலுத்துகிறது இன்றும் பருவ நிலையை தாக்கு பிடித்து வளரும் 102 வகை புதிய பயிர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..