மாநிலங்களவை தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! – ஜி.கே.வாசனுக்கு ஒரு சீட்

அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 அதிமுக வேட்பாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து காலியாகவுள்ள இந்த ஆறு மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் மார்ச் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களை திமுக ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஆனால் ஆளும் அதிமுக சார்பில் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்காமல் இருந்தது. மேலும் கடந்த 7ம் தேதி இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் தொடங்கியது.

Image

இந்நிலையில் தற்போது மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிமுகவின் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி தம்பிதுரை மற்றும் அதிமுகவின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் போட்டியிட வுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

‘வேகமாக பரவும் கொரோனா வைரஸ்’ சாம்சங் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!

‘கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட உலகக்கோப்பை – ஐபிஎல் ரத்தாகுமா?’