சென்னையில் 3 நாள் ஓவியக்கண்காட்சி..! ஓவியச் சந்தை திட்டம் பற்றி அமைச்சர் சுவாமிநாதன் விளக்கம்..!
சென்னையில் மூன்று நாள்கள் நடைபெறும் ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை சந்தையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
சென்னையில் அரசு கலைத்துறை சார்பில் இன்று முதல் இன்னும் மூன்று நாள்களுக்கு நடைபெறும் ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை சந்தையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இதில் தமிழத்தை சேர்ந்த ஓவியம் மற்றும் கலை வல்லுநர்களின் படைப்புகள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஓவியச் சந்தை திட்டம் :
இதுதொடர்பாக கலை பண்பாட்டுத்துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை, கோவையில் கலைஞர்களின் ஓவியம், சிற்பக் கலைப் படைப்புகளைக் காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ‘ஓவியச் சந்தை’ திட்டத்தை செயல்படுத்திட ரூ.10 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. கலைஞர்களை ஊக்கப்படுத்தவும், வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சே.ரா.காந்தி, அரசு அருங்காட்சியகங்களின் இயக்குநர் கவிதா ராமு,சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியின் முதல்வர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..