‘தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவு’ அனைத்து சேவைகளும் முடக்கம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க இன்று ஒருநாள் மக்கள் ஊரடங்கு உத்தரவை செய்லபடுத்துமாறு பிரதமர் மோடி கூறினார். அதன்படி இன்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்பட்டு பொதுமக்கள் யாரும் வெளியே வரவில்லை.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் இந்த மூன்று மாவட்டங்களிலும் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மற்ற அனைத்து சேவைகளுக்கும் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் 75 மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

கொரோனாவை எதிர்கொள்ள தமிழகத்திற்கு 987 கோடி நிதி!

‘கொரோனா எதிரொலி’ நாடு முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து!