போலி மருத்துவர்கள் 3 பேர் கைது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதி சின்ன வளையம் கிராமம் தோப்புத் தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் பத்மநாபன் (58), அதே பகுதி கீழத்தெருவைச் சேர்ந்த மெய்யப்பன் மகன் பாண்டியன் (61), பெரிய வளையம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த மகாமணி மகன் தமிழ்ச்செல்வன் (39) ஆகிய 3 பேரும் தங்களது வீடுகளில் மருத்துவம் படிக்காமல், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் மருத்துவம் படிக்காமல் சிலர் மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இதுக்குறித்து மருத்துவ மற்றும் ஊரக நலத்துறை அலுவலர் மாரிமுத்து ஜெயங்கொண்டம் போலீசில் புகார் செய்தனர்.
இதனை தொடர்ந்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜ் தலைமையில் போலீசார் அப்பகுதி முழுவதும் விசாரணைசெய்து வந்த நிலையில் பத்மநாபன், பாண்டியன், தமிழ்ச் செல்வன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்கள் சிகிச்சைக்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் மருந்து மாத்திரைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பவானிகார்த்திக்