புலி பற்கள், நகங்களை திருடி விற்க முயன்ற 3 பேர் கைது..!
நீலகிரி மாவட்டம் வனப்பாதுகாப்பு படை உதவி வனப்பாது காவலருக்கு கூடலூர் அருகே நாடுகாணி பகுதியில் சிலர் புலி பற்கள், நகங்கள் விற்பனை செய்ய முயற்சிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஆமைக்குளம், பால்மேடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம், சிமியோன், பாலகிருஷ்ணன் ஆகிய 3 நடமாடி வந்தனர்.
அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்களிடம் புலியின் நகங்கள் மற்றும் புலியின் பற்கள் இருப்பது தெரியவந்தது.
பின்னர் வனப்பாதுகாப்பு படை குழு, அவர்களைச் சுற்றி வளைத்து பிடித்து கூடலூர் மாவட்ட வன அலுவலர் வெங்கடேசபிரபு உத்தரவுபடி உதவி வனப்பாதுகாவலர் தலைமையில் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு அவர்களிடம் இருந்த புலியின் நகங்கள் மற்றும் பற்கள் பறிமுதல் செய்து அவர்களைக் கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் பந்தலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கூடலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-பவானி கார்த்திக்