கள்ளழகர் சித்திரை திருவிழாவிற்கு வந்த 3 பேர் சடலங்கள் கல்பாலம் அருகே மீட்பு – ஒரே நாளில் 3பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வைகையாற்றில் கள்ளழகர் சித்திரை திருவிழாவிற்கு வந்த மதுரை விளாச்சேரி பகுதியை சேர்ந்த பிரேம்குமார் – 17 வயது சிறுவனின் உடல் வைகையாற்றின் கல்பாலம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மேலும் 37 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத இளைஞரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.
விளாச்சேரியை சேர்ந்த காசி என்ற இளைஞர் கல்பாலம் அருகே நீரில் முழ்கி இறந்துள்ளார். ஒரே நாளில் சித்திரை திருவிழாவிற்கு வந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.