ஜம்முவில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் மெந்தார் பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து இந்திய ராணுவ வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர் என உளவு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. சில நாட்களாக மெந்தார் மற்றும் பிற பிரிவுகளில் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் இந்திய தரப்பில் ராஜீவ் சிங் ஷெகாவத் என்ற ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர்

What do you think?

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் – மத்திய அரசு அறிவிப்பு

பிட்காயின் மோசடி! – காவல்துறை எச்சரிக்கை