ஒரே தண்டவாளத்தில் 3 ரயில்கள்.. பரபரப்பின் உச்சிக்கு சென்ற பயணிகள்..!
சென்னையில் இயங்கி வரும் மின்சார ரயில்கள் என்பது, தொலை தூரத்தில் இருந்து சென்னைக்கு பணியாற்ற வருவோருக்கு வரப்பிரசாதமாக உள்ளது. கட்டணம் மிகவும் குறைவு என்பதாலும், பயணம் மிகவும் விரைவாக முடிவதாலும் தான், இதற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
எப்போதாவது சில சமயங்களில் தான், ரயில்கள் தாமதம் ஆவது, சிக்னல் கோளாறுகள் ஏற்படுகின்றன. அந்த வகையில், தற்போது மின்சார ரயிலில் பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது, சென்னை ஆவடி அருகே உள்ள பட்டாபிராம், இந்து கல்லூரிக்கு செல்லும் ரயில் பாதையில், நேற்று திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
இவ்வாறு தவறான வகையில் சிக்னல் கொடுத்ததால், ஒரே நேரத்தில், ஒரே தண்டாவளத்தில் 3 ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்துள்ளது. இதனை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், ரயில் வாகன ஓட்டுநர்கள் இதனை கண்டறிந்து, சிக்னல் இன்ஜினியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், அவர்கள் சிக்னல் கோளாறை சரி செய்து, பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதனால், சுமார் அரை மணி நேரத்திற்கு ரயில்கள் தாமதமாக சென்றன.
-பவானி கார்த்திக்