‘கேரளாவில் 3 வயது குழந்தைக்கும் கொரோனா’ பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று கேரளாவில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த 3 வயதுக் குழந்தைக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கேரளாவில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இந்த குழந்தை, தனது பெற்றோருடன் இத்தாலி சென்றுவிட்டு மார்ச் 7ம் தேதி கேரளா திரும்பியிருப்பது தெரிய வந்துள்ளது. குழந்தைக்கு கொரோனா அறிகுறி இருப்பதை அறிந்ததுமே குழந்தையின் பெற்றோர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

What do you think?

அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு – மத்திய அரசு

‘பிளான் பண்ணி பண்ணனும்’ படக்குழுவுடன் இணையும் சிவகார்த்திகேயன்!