3000 ஆபாச வீடியோக்கள்..!! ஜெர்மனில் உல்லாசம்..!! எஸ்.ஐ.டி வெளியிட்ட உத்தரவு..?
கர்நாடக ஹாசன் தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஜேடிஎஸ் கட்சியின் அமைச்சருமான “பிரஜ்வேல் ரேவண்ணா” பாஜக கூட்டணி சார்பில் வருகின்ற மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்.., ஆனால் இவர் மீது பல்வேறு குற்றச்சாற்றுக்கள் இருப்பதாகவும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது..
பிரஜ்வேல் ரேவண்ணா இதுவரை 300க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை சீரழித்து இருப்பதாகவும் 3000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் அவர் மீது இருக்கும் வழக்குகள் குறித்து பாஜகவிற்கு பிரஜ்வேல் ரேவண்ணாவின் ஓட்டுநர் கார்த்திக் என்பவர் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவியது இதனால், கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.., ஆனால் அதனை பொருட்படுத்தாத பாஜக பிரஜ்வேல் ரேவண்ணாவை தேர்தலில் களம் இறக்கியது..
காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளத்தால் அவர் மீதான வழக்குகள் எஸ்.ஐ.டி அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டது.., ஆனால் அதிகாரிகள் விசாரணை தொடங்குவதற்கு முன்னரே பிரஜ்வேல் ரேவண்ணா நாட்டை விட்டு தப்பி சென்று விட்டார்..,
பிரஜ்வேல் ரேவண்ணாவின் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டது யார்..? பிரஜ்வேல் ரேவண்ணாவை வெளிநாட்டிற்கு தப்பி செல்லும் வரை அவருக்கு உறுதுணையாக இருந்தது யார் என்ற கேள்விகள் எழ தொடங்கியது.
இந்நிலையில் கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு இந்த சர்ச்சை குறித்தும், பிரஜ்வேல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வலியுறுத்தியும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதனை தொடர்ந்து பெண்களுக்கு நடத்தப்பட்ட கொடுமைகள் குறித்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது.., பெங்களூருவை சேர்ந்த அல்கா.லம்பா தலைமையிலான குலுக்கள் மற்றும் பெண்கள் அணியினர் சேர்ந்து காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அப்போது பேசிய அல்கா லம்பா தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் இந்த சம்பவத்திற்கும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போல நாடகநாடும் பிரஜ்வேல் ரேவண்ணாவிற்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர்.., அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்தும்.., இன்னும் சில பெண்கள் இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்..
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாருக்கும்.., எனக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை என இணையதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதே சமயம் பிரஜ்வேல் ரேவண்ணா கைது செய்யக்கூடாது என அவரது வழக்கறிஞ்சர் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார்.
ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களின் மனநிலையை கருத்தில் கொண்ட அதிகாரிகள் ஜெர்மனிக்கு சுற்றுலா சென்றுள்ள பிரஜ்வேல் ரேவண்ணா இன்னும் 7 நாட்களுக்கு ஆஜராக வேண்டும்.., அப்படி செய்யவில்லை என்றால்.., அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..