3000 காலி பணியிடங்கள்..! செவிலியர்கள் முன்வைத்த கோரிக்கை..!
கிராம சுகாதார செவிலியர்களை துணை சுகாதார நிலையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை தருமபுரி மாவட்ட செவிலியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறித்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்ட தலைவர் D ராஜேஸ்வரி தலைமையில் 50 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 3 ஆண்டுகளாக 3,000 காலி பணியிடங்களை நிரப்பி ஆன்லைன் கட்டாயத்தை ரத்து செய்ய கோரியும். கூடுதல் பணியிடங்களுக்கு பொறுப்பு வழங்ககோரி அரசுக்கு வேண்டுகோல் விடுத்து ஆர்பாட்டம் செய்தனர். இந்நிகழ்ச்சி யில மாநில தலைமை ஒரிங்கிணைப்பாளர் S. தமிழ்ச்செல்வி உள்ளிட்ட கிராம ஆரம்ப சுகாதார செவிலியர் பலர் கலந்துகொண்டனர்
அதேபோல் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை அனைத்து செவிலியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மாவட்ட பொருளாளர் சாவித்ரி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதனை மாவட்டத்தலைவர் செண்பகவள்ளி துவங்கி வைத்தார்.
இதில் செவிலியர்கள் முன்வைத்த கோரிக்கைகள் என்னவென்றால், கிராம சுகாதார செவிலியர்களை துணை சுகாதார நிலையங்களில் காலி பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். அதேபோன்று ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு டேட்டா ஆப்ரேட்டர்களை நியமனம் செய்து பிக்மி 3.0 செயலியை எளிமைப்படுத்தும் வரை ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் துணை சுகாதார நிலையத்திற்கு எம்.எல்.எச்.பி பணியாளர்களை நியமனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செவிலியர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..