“36 ஆயிரம் காலி பணியிடங்கள்” அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்..? உயர்நீதிமன்றம் கேள்வி..!!
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த புருஷோத்தமன் என்ற தனிநபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 36 ஆயிரம் காலி பணியிடங்கள் இருப்பதால் அதனை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு மின்சாரவாரிய கேங்மேன் தொழிற்சங்கம், நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக இதற்கு முன்னரே அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த வேலைநிறுத்த போரட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், Tangedco தங்களது சுயநலத்திற்காக இந்த போராட்டத்தை நடத்துகிறது, இதனால் மின் வாரியம் கடுமையான நிதி நெருக்கடி சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். விழா காலங்கள் நெருங்கி வரும் இந்த நேரத்தில் Tangedco ஊழியர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் என கூறியுள்ளார்.
இந்த வழக்கின் மனுவானது சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பி.பி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை வந்தது. அப்போது “மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம்” சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேல்முருகன், போராட்டம் நடத்துவதாக அறிவித்ததை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும்., தமிழக முழுவதும் மின் பகிர்மான கழகத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப போவதாகவும் Tangedco சார்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும் Tangedco ஊழியர்களை மின் இணைப்பு பணிகளில் பயன்படுத்தியதனால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மின் விபத்து ஏற்பட்டு 70 பேர் உயிரிழந்துள்ளனர். இப்படி இருக்க அதற்கு தகுதியில்லாதவர்களை பணியில் அமர்த்தினால் இன்னும் உயிரிழப்பு அபாயம் அதிகரிக்கும் என அறிவித்துள்ளது..
அதையடுத்து வழக்கு விசாரணையின் போது ஆஜராகியிருந்த மின்வாரிய தரப்பு வழக்கறிஞர் டி.ஆர். அருண்குமாரிடம், மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை எப்போது நிரப்புவீர்கள் என்பது குறித்து விரைவில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..