‘கொரோனா வைரஸ்’ இத்தாலியில் ஒரே நாளில் 368 பேர் பலி!

கொரோனா வைரஸால் இத்தாலியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 368 பேர் பலியாகியுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகளவில் இதுவரை கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6, 518 ஆக உயர்ந்தது. அதே போல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 1, 69, 610 ஆகவும் உயர்ந்தது.

நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸால் 633 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இத்தாலியில் மட்டும் 368 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலிக்கு அடுத்ததாக ஈரானில் 113 பேர் பலியாகியுள்ளனர்.

வேகமாக பரவி வரும் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

‘தீபம், பூ, கற்கள்’ மாஸ்டர் விழாவில் விஜய் சொன்ன குட்டி கதை!

‘மக்களை அடைக்கக்கூடாது’ மாஸ்டர் விழாவில் CAA, NRC, NPR குறித்து பேசிய விஜய்!