February 27, 2020
Madhimugam
Today Trending அரசியல் தமிழ்நாடு

40 சதவிகித டயர்கள் தமிழகத்தில்தான் உற்பத்தியாகிறது – முதலமைச்சர் பெருமிதம்!

இந்தியாவில் 40 சதவீத டயர்கள் தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கும் சியட் நிறுவனத்துக்கும் இடையே கடந்த 2018-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மதுரமங்கலத்தில் ரூ.4,000 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள டயர் தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பந்த், சியட் டயர் நிறுவன இயக்குநர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வாகன உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதாக தெரிவித்தார். இருசக்கர டயர் முதல் போர் விமான டயர் வரை தமிழகத்தில் தயாரிக்கப்படுவதாக தெரிவித்த அவர், நாட்டில் உற்பத்தியாகும் டயர்களில் 40 விழுக்காடு தமிழகத்தில் தயாரிக்கப்படுவதாக பெருமிதம் தெரிவித்தார். புதிய தொழிற்சாலை திறக்கப்படுவதன் மூலமாக, சுமார் 1,000 பேருக்கு நேரடியாகவும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

Related posts

11 எம்.எ.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

Digital Team

இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை! – CAB

Digital Team

ஆறுமுகசாமி ஆணைய முடிவு வெளியானால் ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும் கம்பி எண்ணுவார்கள் – மு.க.ஸ்டாலின் பேச்சு!

superadmin

லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி…!

superadmin

வெளியானது ரஜினியின் மேன் vs வைல்ட் மோஷன் போஸ்டர் – #ThalaivaOnDiscovery

Digital Team

இனி வாட்ஸப் மூலம் சிலிண்டர் பதிவு செய்யலாம்…!

superadmin
You cannot copy content of this page
Madhimugam