February 27, 2020
Madhimugam
உலகம் மருத்துவம்

400-ஐ கடந்த கொரோனா உயிர்பலி! – தாய்லாந்து மருத்துவர்களிடம் தீர்வு?

சர்வதேச மருத்துவத்துறைக்கு கடும் சவாலாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸால் சீனாவில் மட்டும் இதுவரை 425 பேர் பலியாகியுள்ளனர்.  

சீனாவில் உள்ள ஹூபே மாகாண தலைநகர் வுஹானில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் பரவியது. அங்குள்ள சந்தையொன்றில் விற்கப்பட்ட இறைச்சியில் இருந்து உருவான இந்த வைரஸ் தற்போது உலகையே மிரட்டி வருகிறது. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு பேருக்கு மட்டும் பரவிய இதன் பாதிப்பு தற்போது இருபதாயிரத்து 400 பேரை கடந்துள்ளது. சீனாவில் மட்டும் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கியதில் 425 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸ் சுமார் 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கும் மேலாக சீனாவை கடந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவியதால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுதவிர ஆஸ்திரேலியாவில் 12 பேருக்கும், ஹாங்காங்கில் 15, ஜப்பானில் 20, இந்தியாவில் 3, தாய்லாந்தில் 19 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் மக்காவ், நேபாள், சிங்கப்பூர், தென் கொரியா, இலங்கை, தைவான், வியட்நாம், கனடா, ஐரோப்பா, அமெரிக்கா, பிரிட்டன், பின்லாந்து, பிரான்ஸ்ம் ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, ஸ்பெயின், ஸ்வீடன் ஆகிய நாடுகளிலும் இந்தவைரஸ் பரவியுள்ளது.

இதற்கிடையே தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரஸூக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட மருத்துவர்கள், ஃப்ளூ வைரஸூக்கு எதிரான மருந்தையும், எச்.ஐ.வி. மருந்துகளையும் கலந்து கொடுத்ததில் 48 மணி நேரத்திள் முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இன்னும் பல நாடுகளிலும் கொரோனா வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன

Related posts

மனித உரிமை மீறல் – இலங்கை ராணுவ தளபதிக்கு அமெரிக்காவில் நுழைய தடை

Digital Team

சிங்கப்பூரில் கொரோனா; மத்திய அரசு எச்சரிக்கை!

Digital Team

கொரோனா வைரஸ் உயிரிழப்பு 2,345 ஆக அதிகரிப்பு

Digital Team

92-வது ஆஸ்கர் விருது பட்டியல் – ஜோக்கரை முந்திய பாராசைட்

Digital Team

தொடரும் கொரோனா வைரஸ் மரணம்; பலி எண்ணிக்கை 1662 ஆக அதிகரிப்பு

Digital Team

3 பில்லியின் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்து – டிரம்ப்

superadmin
You cannot copy content of this page
Madhimugam