ஆரோக்கியமான வாழ்விற்கு – அசத்தலான 5 டிப்ஸ்..!!
நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, நாம் உண்ணும் உணவில் சிலவற்றை சேர்த்துக் கொண்டாலே போதும்.. ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய உணவுகள் பற்றி, இனி தினமும் உங்களுக்காக சில குறிப்புகள்..
அத்திப்பழம் : தினமும் இரண்டு அத்திப்பழம் அல்லது அத்தி உலர் பழம் ( Dry Fruit Fig) எடுத்துக் கொண்டால்
பெண்களுக்கு மாதவிடாய் போது வெளியேற்றப்படுகின்ற ரத்தத்தின் அளவை சமநிலை செய்ய உதவுகிறது.
தர்பூசணி : தர்பூசணி சாப்பிட்டால் வயிற்று குளிர்ச்சி தருவதோடு, இதயத்தில் ஏற்படம் பிரச்னைகளுக்கும் தீர்வாக இருக்கிறது.
அடிக்கடி ஏற்படும் பட படப்பு எதுவும் வராமல் பாத்துகொள்கிறது.
ஆரஞ்சு : தினமும் ஒரு ஆரஞ்சு அல்லது ஆரஞ்சு பலம் ஜூஸ் எடுத்துக் கொண்டால், புற்று நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
பேரிச்சம் பழம் : தினமும் 4 பேரிச்சம் பழம் எடுத்துக் கொண்டால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து.
பக்கவாதம், இதய நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றில் இருந்து இதயத்தை பாதுகாக்கிறது.
பப்பாளி பழம் : வாரத்தில் ஒரு முறை பப்பாளி எடுத்துக் கொள்வது சிறந்தது.
வாரத்தில் ஒரு முறை பப்பாளி எடுத்துக்கொள்வதால், இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மையை நீக்கி, ரத்த சோகை ஏற்படாமல் பாதுகாக்கிறது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்களை தெரிந்துக்கொள்ள தொடந்து படித்திடுங்கள்
வெ.லோகேஸ்வரி