‘கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ்’ இந்தியாவில் 39 ஆக உயர்வு!

கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸின் பாதிப்பு 39 ஆக உயர்வு.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் 34 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று கேரளவில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியிலிருந்து நாடு திரும்பிய 3 பேருக்கும், கேரளாவை சேர்ந்த இருவருக்கும் கொரோனா வைரஸின் பாதிப்பு இருப்பதாக கேரளா மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்வு.

What do you think?

‘ஆட்சி கவிழ்ப்பு சதி’ சவூதி அரேபியாவில் இளவரசர்கள் உட்பட மூன்று பேர் கைது!

பெண் சாதனையாளர்களிடம் தனது டிவிட்டர் பக்கத்தை ஒப்படைத்தார் பிரதமர்!