தென்காசியில் சாம்பாரில் விழுந்த குழந்தை சிகிச்சை பலனின்றி மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர்- ஏழை மாணவர்களுக்காக சிவன்மாரி ராணுவ பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இம்மையத்திற்கு சிவன்மாரி குடும்பத்தினருடன் கடந்த 3ம் தேதி சென்றார்.
அங்கு விளையாடிக் கொண்டிருந்த இஷாந்த் (5), மாணவர்களுக்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் சாம்பார் இருந்த பாத்திரத்திற்குள் தவறி விழுந்துள்ளான். படுகாயமடைந்த அவன், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.