AngryAngry CryCry LoveLove OMGOMG

சென்னையில் கொரோனா விழிப்புணர்விற்க்காக இலவசமாக வழங்கப்பட்ட 500 கிலோ சிக்கன் பக்கோடா!

சென்னை ஆதம்பாக்கத்தில் கோழிக்கறியிலிருந்து கொரோனா பரவவில்லை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த 500 கிலோ சிக்கன் பக்கோடா இலவசமாக விநியோகம்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. மேலும் கோழியில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்தி பரவியதால் கோழி விற்பனை மந்தமாகியுள்ளது. சென்னையில் கடந்த வாரம் 180 ரூபாயில் விற்பனையான கோழிகறி தற்போது 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் சென்னை ஆதம்பாக்கம் கக்கன் நகர் பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வரும் அஷ்ரப் அலி, கார்த்திக் ஆகியோர் கொரோனா வைரஸ் கோழியில் இருந்து பரவவில்லை என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பதாகைகளை கட்டி 500 கிலோ கோழி இறைச்சியில் பக்கோடா தயார் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.

ஏராளமான மக்கள் இலவசமாக சிக்கன் பக்கோடா கிடைத்தால் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர்.

What do you think?

‘போஸ் வெங்கட் இயக்கத்தில் கதாநாயகனாகும் உறியடி புகழ் விஜயகுமார்’

‘மாஸ்டரில் இணைந்த யுவன் மற்றும் சந்தோஷ் நாராயணன்’ மகிழ்ச்சியில் ரசிகர்கள்!