கைதான கல்லூரி பேராசிரியர் – உதவிய ஆசிரியர்கள்
திருச்சி மாவட்டம் புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து திருச்சி மகளிர் காவல் நிலையத்தில் மாணவி ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விசாரணையின் பெயரில் பேராசிரியரை இன்று காலை கைது செய்துள்ளனர்.
புகார் அளித்த மாணவிக்கு மட்டுமல்லாது, மேலும் 15 மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பற்றி வெளியில் சொன்னால், எந்த கல்லூரியிலும் சேர முடியாத அளவிற்கு செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
பேராசிரியரின் விசாரணையிலே பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பேராசிரியருக்கு உதவியாக அந்த கல்லூரியில் பணிபுரியும், 5 ஆசிரியர்கள் உதவியாக இருந்துள்ளனர், மேலும் சில கட்சி பிரமுகர் களுக்கும், இதை செய்துள்ளனர்.
அந்த பேராசிரியர் மீது பலமுறை புகார் அளித்தும் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கபட்ட மாணவிகள் மனு வைத்துள்ளனர், அந்த மனுவில் நாங்கள் பாதிக்கபட்டாலும் பரவாயில்லை, எங்கள் படிப்பு பாதியிலே நின்றாலும் பரவாயில்லை, எங்கள் கல்லூர் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்பொழுது தான் எங்களுக்கு பின்னால் பயிலும் மாணவர்கள், பாலியில் தொல்லையில் ஈடுபடாமல் இருப்பார்கள் என இவ்வாறே மனு வைத்துள்ளனர்.
இந்த மனுவை படித்த மாவட்ட ஆட்சியர் சம்பந்தபட்ட அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ கவுன்சிலிங் கொடுத்து படிப்பை தொடரவும் வழிசெய்துள்ளார். கைது செய்த பேராசிரியரிடம் விசாரணை நடத்தி வருவதால், விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து தண்டனை அளிக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.