“55 ஆயிரமும் காலி.. கேட்டா பதிலும் இல்ல” – மோசமாகி வரும் ஆன்லைன் வர்த்தகம்!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியை சேர்ந்தவர் அமர் சவான். பொறியாளராக பணியாற்றி வரும் இவர், கடந்த ஜூலை 13-ஆம் தேதி அன்று, அமேசான் தளத்தில், செல்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
இதனையடுத்து, 2 நாட்கள் கழித்து, அவரது முகவரிக்கு, அமேசான் தரப்பில் இருந்து பார்சல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், 55 ஆயிரம் மதிப்புள்ள செல்போனுக்கு பதிலாக, தேநீர் அருந்தும் கோப்பைகள் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அமேசான் நிறுவனத்திடம் முறையிட்டுள்ளார்.
ஆனால், அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடும் கோபம் அடைந்த அமர், காவல்துறையில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைனில் ஆர்டர் செய்யும் ஒரு பொருளுக்கு பதிலாக இன்னொரு பொருளை டெலிவரி செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்