பி.எஸ்.என்.எல் சிம் கார்டில் அடுத்த ஆண்டு முதல் 5ஜி தொழிநுட்ப சேவை தொடங்கப்படும் என்று ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷவ் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்போது இயங்கும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஈடு செய்யும் அளவில் செயல்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பி.எஸ்.என்.எல் பயனாளர்களை தக்க வைக்கவும் புதிய பயனாளர்களை சேர்க்கவும் புதிய புதிய திட்டங்களை அறிமுகபடுத்தி வருகிறது. இருப்பினும் தற்போது பி.எஸ்.என்.எல் சேவை 3ஜி தொழில்நுட்பத்தில் கிராம புறங்களில் அந்த சிம்மில் இணையதள சேவை துண்டித்து விடுவதாகவும் அல்லது மிக குறைந்த வேகத்தில் செயற்படுவதாகவும் தொடர்ந்து பயனாளர்கள் முறையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷவ் பி.எஸ்.என்.எல் அடுத்தகட்ட நகர்வுகளை பற்றி பேசியுள்ளார் அவர் கூறுகையில், அடுத்த ஆண்டான 2024ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் பி.எஸ்.என்.எல் சிம்மில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தபடும் என்றும் நடப்பு ஆண்டில் 4ஜி சேவை தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.இந்த அறிவிப்பால் பி.எஸ்.என்.எல் பயனாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.