மாமல்லபுரம் அடுத்த மணமை கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்னையிலிருந்து பாண்டிச்சேரி நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஆட்டோவும் மோதிக்கொண்டதில் ஆட்டோவில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பெண்கள் ஒரு ஆண் உள்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த மணமை கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையிலிருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்தும் கடப்பாக்கதிலிருந்து சென்னை நோக்கி வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிகொண்டதில் ஆட்டோவில் பயணம் செய்த சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்த 3 பெண்கள் 2 பெண் குழந்தைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் உள்பட 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி சம்பவம் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து இறந்தவர்களின் விவரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஆட்டோ நிலை தடுமாறி வலது பக்கவாட்டில் திடீரென திரும்பியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இதில் சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் அவரது மனைவி அமுலு தாயார் காமாட்சி யுடன் கடப்பாக்கத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டு தனது இரண்டு பேத்திகளுடன் மகள் சுகன்யாவையும் அழைத்துக் கொண்டு சென்னை நோக்கி செல்லும்போது இந்த விபத்து நடைபெற்றதாக விசாரணையில் தெரிய வருகிறது.
நிகழ்விடத்தில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.