6 மாசம் ஆகியும் ஒன்னும் நடக்கல “குமறும் விஜயதாரணி..” அண்ணாமலையிடம் நேரடி தாக்கு..!!
பாஜகவில் சேர்ந்து 6 மாதங்கள் ஆகியும், இதுவரை எந்த பதவியும் கொடுக்கவில்லை. என பாஜக பிரமுகர் விஜயதாரணி, பொதுக்கூட்ட மேடையிலேயே ஓப்பனாக பேசியுள்ளார்..
முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி :
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணி (காங்கிரஸ் கட்சி) லோக்சபா தேர்தலின் போது பாஜகவில் இணைந்தார்.
கடந்த 2021ம ஆண்டில் மூன்றாவது முறையாக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.. அந்த வெற்றிக்கு பின் சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார் ஆனால் கட்சி மேலிடம் கொடுக்கவில்லை., அதன் பின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியாவது கிடைக்கும் என நினைத்து காத்துகொண்டிருக்க. காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியானது செல்வப்பெருந்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கமிட்டி தலைவர் பதவி மட்டுமின்றி பிற பதவிகளுக்கு அவருக்கு கொடுக்கபடாததால் கடும் அதிருப்திக்கு ஆளாகினார்..
காங்கிரஸில் இருந்து விலக காரணம் :
அதையடுத்து, பாஜக தலைவர்கள் விஜய தாரணியிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் லோக்சபா தேர்தலையொட்டி பாஜகவில் இணைந்தார். பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் விஜயதாரணி பாஜகவில் சேர்ந்தார். விஜயதாரணி கட்சி தாவியதால் அவர் எம்.எல்.ஏவாக இருந்த விளவங்கோடு தொகுதியில் எம்.எல்.ஏ பதவியும் பறிபோனது.
அதையடுத்து, பாஜக சார்பில் விஜயதரணிக்கு கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் சீட் கொடுக்கப்படும் என கூறியநிலையில். விஜயதரணிக்கு சீட் கொடுக்கவில்லை. அதேபோல, விளவங்கோடு சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தலிலும் விஜயதரணிக்கு பாஜக வாய்ப்பு அளிக்கவில்லை. மேலும் கட்சிலும் எந்த பொறுப்பும் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது…
பாஜக சார்பில் சென்னையில் நேற்று மாலை “தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்” என்ற தலைப்பின் கீழ் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக் கூட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது விஜயதாரணி பேசுகையில், “3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான். எம்எல்ஏ என்ற பதவியை விட்டுவிட்டு பாஜகவில் சேர்ந்தேன். பல எதிர்பார்ப்பு களோடு பாஜகவில் சேர்ந்தேன். “நன்றாக உழைக்க வேண்டும், கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டுமென்றால் எனக்கு பதவி வழங்க வேண்டும்..
இன்னும் எனக்கு பதவி கொடுக்கல :
நான் பாஜகவில் சேர்ந்து 6 மாதம் ஆகிவிட்டது, இன்னும் ஏன் எனக்கு பதவி கொடுக்கவில்லை. பிரச்சனை இல்லை. நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள். எனக்கு நல்லது பண்ணுவீங்க என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் என்னைப் போல கட்சிக்காக உழைப்பவர்களை பாஜக நிச்சயம் பயன்படுத்திகொள்ளும்.
கேசவவிநாயகம் அண்ணனுக்கு என்னை நன்றாகத் தெரியும். என் தொகுதிக்காரர். என்னை பல ஆண்டுகளாக எம்.எல்.ஏவாக பார்த்தவர். நம் தலைவர் அண்ணாமலை தம்பி எப்போதும், “உங்களை போல தியாகம் செய்துவிட்டு கட்சிக்கு வந்தவர் வேறு யாரும் இல்லை” இது எல்லோருக்கும் தெரியும்.
நாம் கட்சிப் பணிக்காகவும் தேசப்பணிக்காவும் சேர்ந்துள்ளோம். இதில் இன்னும் நிறைய பெண்களை ஈடுபடுத்த வேண்டும். புதுச்சேரியின் முன்னால் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அக்காவிற்கு பாஜகவில் மாநில தலைவர் பதவி கொடுத்துள்ளீர்கள். அதே போல நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை நிதித்துறை அமைச்சர் பதவியை கொடுத்தார்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கட்சியாக இருக்கும் பாஜக எனக்கும் ஒரு பொறுப்பை கொடுக்க வேண்டும்..
முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி, பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரிடம் நேரடியாக தனக்கு பதவி கொடுக்க வேண்டும் என பொது மேடையிலேயே கோரிக்கை வைத்தளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..