6 ஓபிஎஸ் வேட்பளார்கள்..!! 5 ஓபிஎஸ்க்கு பின்னாடி இவரா..? குமறும் ரியல் ஓபிஎஸ்..!!
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் வேட்பளார்கள் தங்களின் மனுக்களை தாக்கல் செய்ய தொடங்கினார்கள். இந்த மனு தாக்கல் நேற்றைய முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில்
ராமநாதபுரத்தில் லோக்சபா தொகுதியில் மொத்தம் 56 பேர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த மனுக்கள் பரிசீலனை நேற்று காலை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான விஷ்ணு சந்திரன் மற்றும் பார்வையாளர் பண்டாரி யாதவ் மறுபரிசீலனை செய்தனர்.
இதில் அனைத்து கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது, 56 மனுக்களில், 28 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 28 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் :
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாகவும், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரபிரபா ஆகியோர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதனிடையே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிடுவதால் வாக்காளர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஓபிஎஸ் என்ற பெயரில் 5 பேர் சுயேச்சையாக போட்டியிட போவதாக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 5பேரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 6வதாக பன்னீர்செல்வம் என்ற பெயரில் இன்னும் ஒருவர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
நேற்று சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளநிலையில் வாக்குப்பதிவிற்கு சென்ற ஓபிஎஸ்-கள் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே நெருக்கடி கொடுப்பதாகவும், வாக்குவாதம் செய்து கலவரம் ஏற்படுத்துவதாகவும் ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஓபிஎஸ்க்கு சின்னம் ஒதுக்கீடு செய்தால் அது சிலபேருக்கு பொறுக்கவில்லை எனவே ஐந்து போலி ஓபிஎஸ் வேட்பளார்களை எடப்பாடி களத்தில் இறக்கிவிட்டிருப்பதாகவும் இதனால் தேர்தலில் பெரும் சிக்கல் ஏற்பட்டு தோல்வி அடைய வாய்ப்புகள் இருப்பதாக கூறி ஓபிஎஸ் குமறுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதை விளக்கும் விதமாக ஓ பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் அண்மையில் வீடியோ ஒன்றில் பேசி இணைய தளத்தில் பதிவிட்டிருந்தார்.. அதில் அவர் பேசியதாவது, கடந்த திங்களன்று ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்து விட்டு திரும்பும் போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வரவேற்று ஆதரவு கொடுத்தார்கள்..,
இதை பார்த்து பொறுக்காத சூழ்ச்சிகார எடப்பாடி அவரின் அல்லக்கைகளை வைத்து ஓபிஎஸ் என்ற பெயரில் 5 நபர்களை தேர்தல் களத்தில் இறக்கி உள்ளார்.., எங்களது ராமநாதபுரம் மக்களை நீங்கள் முட்டாள் என நினைதீர்களா..? எங்கள் மக்கள் அப்பொழுதும் நியாயத்தின் பக்கம் தான் வாக்களிப்பார்கள். நீங்க வேணும்னா பாருங்க ஏப்ரல் 19ம் தேதி ஓபிஎஸ்ஸின் குரல் எதிரொலிக்கும்.
உங்களுக்கு எதிராக வாக்களித்து சூழ்ச்சிக்காரன் உன் முகத்தில் கரியை பூசுவார்கள் என பேசி பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், பன்னீர் செல்வம் பெயரில் மனு தாக்கல் செய்திருந்த 5 பேரும் நேற்று வேட்புமனுப் பரிசீலனைக்கு வரவில்லை. அவர்கள் 5 பேரை அதிமுகவினர் அவர்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் பிரதீப் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..