ஆசிரியர் வீட்டில் ஆட்டைய போட்ட 6 பேர்..!! போலி போலீஸ் சிக்கியது எப்படி…?
ஆற்காட்டில் கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வசிக்கும் பேராசிரியை வீட்டில் சிறப்பு போலீசார் சோதனை செய்ய வந்துள்ளதாக கூறி வீட்டிலிருந்து லேப்டாப், செல்போன், ரொக்கம் மற்றும் தங்க நகையை திருடி சென்ற 6 பேர் கும்பலை ஒரே நாளில் ஆற்காடு டவுன் போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் லட்சுமிபிரியா (வயது 40) பேராசிரியையாக சென்னையில் பணியாற்றுகிறார்.இவரது கணவர் வசந்தகுமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது இரண்டு மகன்களுடன் ஆற்காட்டில் லட்சுமி பிரியா வசிக்கிறார்.
இந்நிலையில் 6 பேர் கொண்ட கும்பல் லட்சுமிபிரியாவின் வீட்டுக்கு வந்து நாங்கள் சென்னையைச் சேர்ந்த சிறப்பு போலீசார் என அடையாள அட்டையை காண்பித்து தங்களது வீட்டை சோதனையிட வேண்டும் என்று கூறி அவரது வீட்டின் அனைத்து அறைகளிலும் சோதனையிட்டுள்ளனர்.அவர்கள் சென்ற பிறகு லட்சுமி பிரியா வீட்டில் இருந்த பொருட்களை சரி பார்த்ததில் லேப்டாப், செல்போன், தங்கம் மற்றும் ரொக்கம் திருடு போனது தெரிந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆற்காடு டவுன் போலீசில் லட்சியம்பிரியா புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் சந்தேகப்படும்படியாக வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்ததில் வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்த ராஜசேகர் (வயது 41) என்பது தெரிந்தது. அவர் பேராசிரியை லட்சுமிபிரியா வீட்டில் சிறப்பு போலீசார் என போலியாக சோதனையிட சென்றது தெரிந்தது. அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் வேலூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 29 ), காதர் (வயது 20), ஜெகன் (வயது 20) வேலூர் கீழ அரசம்பட்டு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்குமார் (வயது 27), திருவண்ணாமலை மாவட்டம் தச்சூரை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 25) என்பது தெரிந்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் ஆற்காடு நீதிமன்றத்தில் ஆஜர் படைத்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்அவர்களிடம் இருந்து ஒரு லேப்டாப், செல்போன், 3 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த போலியான போலீஸ் அடையாள அட்டையும் ,கார் பறிமுதல் செய்தனர்.லட்சுமிபிரியா தனியாக வசிப்பதை தெரிந்து இந்த கும்பல் இந்த செயலில் ஈடுபட்டதா..? அல்லது வேறு ஏதேனும் காரணமான போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
போலி போலீசை ஒரே நாளில் ஆற்காடு டவுன் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. ஆற்காடு பகுதியில் பெண் பேராசிரியரை போலீசார் என ஏமாற்றி கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..