தட்கல் டிக்கெட்டில் முறைகேடு – 60 பேர் கைது

சட்டவிரோத மென்பொருளை பயன்படுத்தி முறைகேடாக தட்கல் டிக்கெட் பதிவு செய்து வந்த 60 ஏஜெண்டுகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பொங்கல் உள்ளிட்ட விழாக்காலங்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் தீர்ந்துபோவது ரயில் பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியாகவும், சிரமத்தையும் ஏற்படுத்தி வந்தது. இதுகுறித்து பலர் ரயில்வே துறைக்கு தொடர்ந்து புகார்களை அனுப்பி வந்தனர். இதனடிப்படையில் சி.ஆர்.பி.எப் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது,  ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை முடக்கும் ‘ஏ.என்.எம்.எஸ், எம்.ஏ.சி, ஜாக்குவார் ஆகிய சட்டவிரோத மென்பொருளை ஏஜெண்டுகள் பயன்படுத்தி முறைகேடாக தட்கல் டிக்கெட் பதிவு செய்தது தெரியவந்தது. இந்த மென்பொருளை முடக்கிய போலீசார், பல்வேறு ரெயில்வே கோட்டங்களை சேர்ந்த 60 ஏஜெண்டுகளை கைது செய்துள்ளனர். இவர்கள் இதன்மூலம் ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது தெரியவந்தது.

What do you think?

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு; மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் அம்பலம்!

மதுரை CAA போராட்டத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி!