‘ஈரானில் கொரோனாவால் ஒரே நாளில் 63 பேர் பலி’

ஈரானில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸால் 63 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவின் வுஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சீனவை அடுத்து ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த மூன்று நாடுகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் ஈரானில் ஏற்கனவே கொரோனாவால் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் உயிரிழந்துள்ள நிலையில் இன்று மேலும் 63 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 354 ஆக உயர்ந்துள்ளது.

What do you think?

‘கொரோனாவால் சீன பொருளாதரத்திற்கு வந்த சோதனை’ இந்தியாவுக்கு அடித்த Luck !

வெளியானது விஷாலின் துப்பறிவாளன் -2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்….!