பிரியாணி கடை விளம்பரத்திற்கு 7 லட்சமா..? சவுக்கு சங்கருக்கு ஜாமீன்..!
கரூர் காந்தி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்., இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் பழகி வந்துள்ளார். பிரியாணி கடை உரிமையாளரான கிருஷ்ணன் கடையை பற்றிய விளம்பரம் செய்ய ஆசைப்பட்டுள்ளார்., அதை பயன்படுத்திகொண்ட விக்னேஷ்.
தங்கள் யூடியூபில் விளம்பரம் செய்தால் உங்கள் நிறுவனம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகி விடும் என கூறி 7 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால், விக்னேஷ் பணத்தை பெற்றுக்கொண்ட பின் சொன்னபடி நடந்து கொள்ளாமல், இழுத்தடித்து வந்துள்ளார்.
இதனால் ஏமாற்றத்தை உணர்ந்த கிருஷ்ணன் தனது பணத்தை திரும்ப கேட்டுள்ளார், ஆனால் விக்னேஷ் பணம் தர முடியாது என கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான கிருஷ்ணன் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின், பெயரில் விக்னேஷை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதன் அடிப்படையில், கடந்த ஜூலை 9ம் தேதி சவுக்கு சங்கரை புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து கரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
போலீசாரின் கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி, 4 நாள் மட்டும் கஸ்டடி கொடுத்து உத்தரவிட்டார். கஸ்டடி முடிந்து இரண்டாவது முறையாக சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதனைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 23) வரை சவுக்கு சங்கருக்கு நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் எண் 1 நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடந்தது. அதில் சவுக்குசங்கர் தரப்பில் இந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீன் கோரப்பட்ட நிலையில், ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் கஞ்சா கடத்தல் வழக்கு மற்றும் பெண் போலீசை ஆபாசமாக பேசிய வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
– லோகேஸ்வரி.வெ