கள்ளகுறிச்சி விஷ சாராயம் சம்பத்தில் முக்கிய குற்றவாளிகள் 7 பேர் கைது..! விசாரணையில் வெளி வந்த பல பகீர் தகவல்..!
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தி இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில். அதனை விற்பனை செய்த கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவருடைய மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகியோர் மீது 328, 304, 4(1i), 4(1a) ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
அதன் பின் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். காவலில் இருந்த போது அவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர்கள் கூறியதாவது.. மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை சின்னதுரை என்ற வியாபாரியிடம் இருந்து கன்னுக்குடி வாங்கியுள்ளார்.
சின்னத்துரை அளித்த வாக்கு மூலத்தின் படி பிரபல சாராய வியாபாரியான சின்னதுரையை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மெத்தனாலை மொத்தமாக சப்ளை செய்யும் வியாபாரி மாதேஷ், சங்கராபுரம் ஜோசப் ராஜா, மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த சாராய வியாபாரியான ராமர் மகன் முத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கெட்டுப்போன மெத்தானாலை வாங்கியதும் அதில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது, அதை விற்றதால் மனித உயிர்கள் பறிபோன கொடூரம் நடந்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மெத்தனால் விற்பனை செய்யும் மொத்த வியாபாரியான புதுச்சேரி மடுகரை மாதேஷ் தனது கூட்டாளிகளான ஜோசப் ராஜா, முத்து உள்ளிட்டோருடன் அவ்வப்போது ஆந்திரா சென்று அங்குள்ள ரசாயன தொழிற்சாலையில் இருந்து கெட்டுப்போன மெத்தனாலை மாதேஷ் வாங்கியுள்ளார்.
அதை ஜோசப் ராஜாவிடம் கொடுத்து பிரபல சாராய வியாபாரியான சின்னதுரையிடம் விற்பனை செய்துள்ளார். அவர் கெட்டுப்போன மெத்தனாலை, கடந்த 17ம் தேதி கள்ளக்குறிச்சி அடுத்த சூலாங்குறிச்சி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன் (எ) கன்னுக்குட்டியை வரவழைத்து 60 லிட்டர் (4டியூப்), 30 லிட்டர் (3டியூப்) 3 சிறிய பாக்கெட் விஷசாராயத்தை முன்பணம் வாங்கி விற்றுள்ளார்.
கன்னுக்குட்டி சாராயம் குடிக்காதவர் என்பதால், அதை வாங்கி, தனது தம்பி தாமோதரனிடம் அதை கொடுத்து குடித்து பார்க்குமாறு கூறி உள்ளார். அவர் குடித்து பார்த்து கெட்டுபோய் விட்டதாக கூறி உள்ளார்.
ஆனால் அதனை பொருட் படுத்தாத சின்னதுரை, உயர்ரக சரக்கு எனக்கூறி விற்பனை செய்துள்ளார். இந்த விஷ சாராயம் குடித்து தான் இத்தனை உயிர்கள் பறிபோய் விட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த விவரங்கள் அனைத்தும் சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் வெளிவந்தது.
கைப்பற்றப்பட்ட விஷ சாராயம் மற்றும் மெத்தனால் கலந்த ரசாயன டியூப்களை பரிசோதனைக்காக தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர். எந்த நிறுவனத்திடம் இருந்து இந்த மெத்தனால் வாங்கப்பட்டது, மேலும் யார், யாருக்கு இதில் தொடர்பு உள்ளது என 4 பேரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..