வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 18 மாத குழந்தையை தெருநாய்கள் கடித்து குதறியதில் பலியான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஜி.சிகடம் மண்டலம் மேட்டவலசா கிராமத்தை சேர்ந்த ராம்பாபு – ராமலட்சுமி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். இதில் 18 மாதமான சாத்விகா என்ற பெண் குழந்தை நேற்று மாலை வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்துள்ளது.
பெற்றோர் வீட்டில் வேலை பார்த்து கொண்டுருந்தபோது 5 தெரு நாய்கள் ஒன்றாக சேர்த்து தாக்கி சாத்விகா கடித்து இழுத்து கொண்டு அருகில் உள்ள தோட்டத்திற்கு இழுத்து சென்று கடித்து குதறியது. பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தின் குழந்தையை தேடி கண்டுபிடிப்பதற்குள் அரை மணி நேரத்தில் குழந்தை சாத்விகாவிற்கு நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்தது.
உடனடியாக சாத்விகாவை சிகிச்சைக்காக ராஜம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை சாத்விகா இறந்தது. தொடர்ந்து அப்பகுதியில் தெரு நாய்கள் கால்நடைகளை தாக்கி வந்த நிலையில் வீட்டின் வெளியே விளையாடு கொண்டிருந்த 18 மாத குழந்தையை கடித்து தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து தெருநாய்களால் தங்கள் பகுதியில் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.